செந்தமிழ்சிற்பிகள்

'மனோன்மணீயம்' சுந்தரனார் (1855-1897)

'மனோன்மணீயம்' சுந்தரனார் (1855-1897)

அறிமுகம் 

பெ. சுந்தரனார் கேரளம், ஆலப்புழையில் பிறந்தவர் . இவர்  நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். திருவனந்தபுரம் மகராஜாக் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ. பட்டங்கள் பெற்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். 

தமிழ் இலக்கிய வரலாற்றின் தமிழ்நாடகத் துறை,  கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.

தமிழ் பணி

  • கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப்படியெடுத்து உள்ளார்.
  • தமிழ் வரலாற்றை கல்வெட்டுகளின் வழியாக ஆராய்ந்து வகுக்கும் முறையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர்.
  • தமிழின் தனித்தியங்கும் தன்மையையும் பண்பாட்டு மேன்மையையும் வலியுறுத்தியவர். 
  • தமிழ்மொழியை திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழியாக முன்னிறுத்தியவர்.
  • திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர்.
  •  தமிழ் இலக்கியங்களின் வழியாக தமிழக வரலாற்றின் காலத்தை கணிக்கும் முறைக்கு முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். 
  • ‘திருஞானசம்பந்தர் காலம்’ என்னும் இவரது நூல் சம்பந்தரின் காலத்தை ஆதாரபூர்வமாக வரையறை செய்தது. அதிலிருந்து மற்ற காலக்கணிப்புகள் நடைபெற்றன. 

மொழிபெயர்ப்பு 

பத்துப்பாட்டு,  திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ. சுந்தரனார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

படைப்புகள் 

  • லிட்டன் பிரபு எழுதிய 'ரகசிய வழி' கதையின் தழுவலாகத் தன்னுடைய ‘மனோன்மணியம்’ நாடகத்தைப் பெ.சுந்தரனார் எழுதினார். நாடக மறுமலர்ச்சிக்கு திருப்புமுனையாக இந்நூல் அமைந்தது.
  •  ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற நூலை உரைநடையில் எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. 
  • திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார்.
  • ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார்.
  • சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

விருதுகள்  

  • இவர் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
  • ‘மனோன்மணீயம்’ என்ற நாடகத்தின் காரணமாக இவர் ‘மனோன்மணீயம் சுந்தரனார்’ என அழைக்கப்பட்டார். 
  • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ‘மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்’ இவரது பெயரால் அமைக்கப்பட்டுள்ளது.